சினிமா செய்திகள்

‘சைபர் கிரைம்’ உலகத்தை கண் முன் கொண்டு வரும் ‘சக்ரா’ + "||" + Chakra film brings the world of ‘Cyber Crime’ to the forefront

‘சைபர் கிரைம்’ உலகத்தை கண் முன் கொண்டு வரும் ‘சக்ரா’

‘சைபர் கிரைம்’ உலகத்தை கண் முன் கொண்டு வரும் ‘சக்ரா’
விஷால்-ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியாக நடித்துள்ள ‘சக்ரா’, இதுவரை பார்த்திராத சைபர் கிரைம் உலக படமாக இருக்கும்.
"சைபர் கிரைம் உலகத்தை படம் பார்ப்பவர்களின் கண் முன் கொண்டு வரும்” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் எம்.எஸ்.ஆனந்தன். இவர் மேலும் கூறுகிறார்:-

“இந்த படத்தில் நிதானமாக யோசித்து செயல்படும் திடகாத்திரமான ராணுவ வீரராக விஷால் நடித்து இருக்கிறார். இது ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு குற்ற உலகை பற்றிய எச்சரிக்கையை தரும் படமாகவும் இருக்கும். கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், காவல் துறை அதிகாரியாக நடித்து இருக்கிறார்.

ஒரு வீட்டில் நடக்கும் சிறு கொள்ளை, எதிர்பாராத குற்ற உலகுக்குள் இழுத்துச் செல்லும். விஷாலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் இணைந்து அதை கண்டுபிடிப்பார்கள். படம், மிக விரைவில் திரைக்கு வரும்”.

தொடர்புடைய செய்திகள்

1. நூதன கொள்ளையர்களும், துப்பறிந்து பிடிக்கும் ராணுவ வீரரும் சக்ரா - விமர்சனம்
போலீஸ் நெருங்க முடியாத அளவுக்கு அதிபுத்திசாலித்தனமாக அந்த கொள்ளைகள் நிகழ்ந்திருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். சக்ரா படத்தின் சினிமா விமர்சனம்.