இளையராஜா சொன்ன ஜோதிடம் பலித்தது பாடகி சித்ரா மலரும் நினைவு


இளையராஜா சொன்ன ஜோதிடம் பலித்தது பாடகி சித்ரா மலரும் நினைவு
x
தினத்தந்தி 12 Feb 2021 6:05 AM GMT (Updated: 12 Feb 2021 6:05 AM GMT)

பிரபல சினிமா பின்னணி பாடகி சித்ரா தனது இசை வாழ்க்கை பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

“நான் பாசில் இயக்கத்தில் நதியா நடித்த மலையாள படத்தில் முதல் பாடலை பாடி சினிமாவில் அறிமுகமானேன். அந்த படத்தை தமிழில் எடுக்கும்போது இளையராஜா இசையமைத்தார். தமிழிலும் என்னையே பாட வைக்க அவர் வாய்ப்பு கொடுத்தார். மறுநாள் எம்.ஏ. தேர்வு எழுதபோக வேண்டி இருந்ததால் ரிக்கார்டிங்கை முடித்து புறப்பட தயாரானபோது இன்னும் ஒரு நல்ல பாடல் இருக்கு பாடிட்டு போங்க. தேர்வு எப்ப வேண்டுமானாலும் எழுதலாம். இந்த பாடல் பெரிய இடத்துக்கு உங்களை கொண்டு போகும் என்று இளையராஜா சொன்னார். யோசித்து தேர்வு அப்புறம் எழுதலாம் என்று முடிவு செய்து அவர் சொன்ன பாடலை பாடினேன். அதுதான் சிந்து பைரவியில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன் பாடல். அது தேசிய விருதையே கொண்டு வந்தது. இந்த பாட்டுக்கு பிறகு நீங்கள் எங்கேயோ போவீர்கள் என்று இளையராஜா சொன்ன ஜோசியம் பலித்தது. அந்த பாடல் என்னை பெரிய சிகரத்துக்கு கொண்டு போனது. 17 ஆண்டுகளில் 4 தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் சேர்த்து 25 ஆயிரம் பாடல்கள் பாடினேன். சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்தது சொல்ல முடியாத சோகம். தெலுங்கு, தமிழில் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அவர் எழுதி கொடுத்த டைரி இப்போதும் என்னிடம் இருக்கிறது. சுசீலா பாடல்கள் வேதம் படிப்பது மாதிரி. எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பாடனும் என்பதை எஸ்.ஜானகியிடம் கற்றேன்.

இவ்வாறு சித்ரா கூறினார்.

Next Story