சினிமா செய்திகள்

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஓவியா டுவீட் + "||" + Actress Ovia tweets against Prime Minister Modi's visit to Chennai

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஓவியா டுவீட்

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஓவியா டுவீட்
பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஓவியா டுவீட் செய்துள்ளார்.
சென்னை,

பிரதமர் நரேந்திரமோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் நரேந்திர மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் பிரதமரின் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சிலர் டுவீட் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கில் டுவீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.