சினிமா செய்திகள்

எனக்கு பாலியல் சீண்டல்கள் சுயசரிதையில் பிரியங்கா சோப்ரா தகவல் + "||" + Sex for me In the autobiography Priyanka Chopra Info

எனக்கு பாலியல் சீண்டல்கள் சுயசரிதையில் பிரியங்கா சோப்ரா தகவல்

எனக்கு பாலியல் சீண்டல்கள் சுயசரிதையில் பிரியங்கா சோப்ரா தகவல்
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பின்னர் இந்தியில் முன்னனி கதாநாயகியாக உயர்ந்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்தார்.
அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டிலேயே குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி உள்ளார். அதில் பாலியல் சீண்டல்கள் பற்றிய பிரியங்கா சோப்ரா கூறும்போது, “2000-ம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்றதும் சினிமா வாய்ப்பு தேடி இயக்குனர் ஒருவரை அணுகினேன். அவர் எனது உடல் பாகங்கள் குறித்து ஆபாசமாக பேசினார். இதனால் மிகவும் எரிச்சல் ஏற்பட்டது. சல்மான்கான் படத்தில் கவர்ச்சியாக நடனமாடியபோது அந்த படத்தின் இயக்குனர் உள்ளாடை தெரியும்படி ஆட நிர்ப்பந்தித்தார். நடிகைகளை கேவலமாக நினைத்த அந்த இயக்குனர் செயல் மனதை புண்படுத்தியதால் படத்தில் இருந்து வெளியேறிவிட்டேன். விஜய்யுடன் நடித்த தமிழன் எனக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது. ரசிகர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை விஜய்யிடம் கற்றுக்கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.