சினிமா செய்திகள்

விஜய் நடிக்கும் 2 படங்கள் + "||" + Starring Vijay 2 pictures

விஜய் நடிக்கும் 2 படங்கள்

விஜய் நடிக்கும் 2 படங்கள்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஓ.டி.டி.யிலும் வெளியானது.
இந்த நிலையில் விஜய் அடுத்து நடிக்க உள்ள 65-வது படத்தை நெல்சன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்து சம்பள பிரச்சினையால் அவர் விலகியதால் நெல்சனுக்கு வாய்ப்பு வந்துள்ளது. இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கி பிரபலமானவர். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய்யின் 66-வது படம் பற்றிய தகவலும் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தை அட்லி, லோகேஷ் கனகராஜ், வினோத் ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.