சினிமா செய்திகள்

எப்போ கல்யாணம் நடக்கும்? என் கஷ்டம் உனக்கு புரியுதா? செல்லப்பிராணியிடம் கோரிக்கை வைத்த சிம்பு! + "||" + When will I get married? Simbu who made the request

எப்போ கல்யாணம் நடக்கும்? என் கஷ்டம் உனக்கு புரியுதா? செல்லப்பிராணியிடம் கோரிக்கை வைத்த சிம்பு!

எப்போ கல்யாணம் நடக்கும்? என் கஷ்டம் உனக்கு புரியுதா? செல்லப்பிராணியிடம் கோரிக்கை வைத்த சிம்பு!
நடிகர் சிம்பு தனது செல்லப்பிராணி நாயுடன் வேடிக்கையாக கொஞ்சி விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிம்பு. சிம்புவின் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் திரைப்படம் அண்மையில் வெளியாகி அவருடைய ஆதர்ச ரசிகர்களுக்கு பெரும் மன நிறைவை கொடுத்தது. தற்போது மாநாடு மற்றும் பத்து தல படப்பிடிப்புகளில் சிம்பு பிசியாக இருக்கிறார். 

சமீபத்தில் சிம்பு சகோதரியின் மகன் அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த வீடியோ வைரலானது. அந்த வகையில் தற்போது சிம்பு தனது செல்லப்பிராணி நாய் கோகோவுடன் வேடிக்கையாகப் பேசி கொஞ்சி விளையாடிய வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும், அப்புறம் தான் உனக்கு. நான் மட்டும் தனியா இருக்கும் போது நீ ஜாலியா இருந்தா அது நியாயம் கிடையாது.  

என் கஷ்டம் உனக்கு புரியுதா? என்ன அப்படி பார்க்கிறாய் .. எனக்கு திருமணம் ஆகிடும்னு சொல்ல வர்றியா? ஆகாதுனு சொல்ல வர்றியா?. ஓ ஆகிடும்னு சொல்றியா?” எனப்அதற்கு அந்த நாய் கொடுக்கும் ரியாக்ஷன்களும் பார்ப்போர் ரசிக்கும் படியாக உள்ளது. 

காதலர் தினத்தில் கோகோவுடன் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு.