சினிமா செய்திகள்

எனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது - நடிகை மீரா மிதுன் + "||" + I have suicidal ideation Actress Meera Mithun

எனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது - நடிகை மீரா மிதுன்

எனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது - நடிகை மீரா மிதுன்
சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துகள் பதிவிடும் நடிகை மீரா மிதுன் முன்னணி கதாநாயகர்களையும் விமர்சித்து எதிர்ப்புக்கு உள்ளானார்.
தற்போது மன அழுத்தத்தினால் தற்கொலை எண்ணம் வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு மன அழுத்தம் உள்ளது. தற்கொலை எண்ணமும் வருகிறது. மன அழுத்தம் இருப்பதை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனாலும் என்னை தொந்தரவு செய்வது நிறுத்தப்படவில்லை.

எனக்கு மன நலம் பாதித்து வருகிறது. நான் இறந்தால் அதற்கு காரணமான அனைவரையும் தூக்கில் போடவேண்டும். 3 வருடங்களுக்கும் மேலாக என்னை அவதூறு செய்கிறார்கள். அதனால்தான் சமூக வலைத்தளம் பக்கம் நான் வரவில்லை. வலைத்தளம் மூலம்தான் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். முழுமையாக மன அழுத்தத்தில் இருக்கிறேன். இந்த வலியை நிறுத்த விரும்புகிறேன். சாக விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.