சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் வைரலாகும்: காதலரின் கைப்பிடித்த நயன்தாரா புகைப்படம் + "||" + The website is viral Valentine hand Photo by Nayantara

வலைத்தளத்தில் வைரலாகும்: காதலரின் கைப்பிடித்த நயன்தாரா புகைப்படம்

வலைத்தளத்தில் வைரலாகும்: காதலரின் கைப்பிடித்த நயன்தாரா புகைப்படம்
நடிகை நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவது, கோவில்களில் சாமி கும்பிடுவது போன்ற புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தியும் வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிப்பதாகவும் கிசுகிசுக்கள் வருகின்றன. காதல், திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் தொடர்ந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள். நயன்தாரா கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு இன்னும் சில மாதங்களில் விக்‌னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா பட்டு சேலையிலும் விக்னேஷ் சிவன் பட்டு சட்டை அணிந்தும் நேற்று காதலர் தினத்தை கொண்டாடினர். அந்த புகைப்படத்தை விக்‌னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தங்கமே எப்போதும் உன்னை காதலிப்பேன். காதலர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் கையை நயன்தாரா பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.