சினிமா செய்திகள்

மீண்டும் 2 படங்களில் நடிக்கும் ரஜினி? + "||" + Again in 2 films Starring Rajini

மீண்டும் 2 படங்களில் நடிக்கும் ரஜினி?

மீண்டும் 2 படங்களில் நடிக்கும் ரஜினி?
ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து மீண்டும் சினிமாவில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார்.
அவரது அண்ணாத்த படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு மேல் முடிந்து விட்டது. மீதியையும் முடிக்க இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். முந்தைய படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கொரோனா தடுப்பு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர். ஓரிரு மாதங்களில் முழு படத்தையும் முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி மேலும் 2 புதிய படங்களில் நடிக்க ஆலோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை எடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டியதுடன் தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியுள்ளார். இதுபோல் மேலும் சில இயக்குனர்களும் ரஜினிக்கு கதை வைத்துள்ளனர். அண்ணாத்த படப்பிடிப்பை முடித்ததும் ரஜினி நடிக்க உள்ள புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் 2 படங்களில் நடிக்க தயாராகும் ரஜினி
ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியதுடன் இனிமேல் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார்.