சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் தனுஷ் + "||" + In a new look Dhanush

புதிய தோற்றத்தில் தனுஷ்

புதிய தோற்றத்தில் தனுஷ்
தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் பட்டாஸ் படம் வெளியானது.
தற்போது அவர் கைவசம் ஜகமே தந்திரம், கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் படம், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள், இந்தியில் அந்த்ரங்கி ரே என்று 6 படங்கள் உள்ளன. அடுத்து ‘தி க்ரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்தித்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடிக்கிறது. இந்த நிலையில் கர்ணன் படத்தில் தனுஷ் நடிக்கும் வித்தியாசமான தோற்றம் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் முகத்தில் ரத்தம் வழிய கையில் விலங்குடன் ஆவேசமாக நிற்கிறார். இந்த படத்தை ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். கர்ணன் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 3 மொழி படத்தில் நடிக்கும் தனுஷ்
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.