சினிமா செய்திகள்

நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு + "||" + Chennai High Court orders release of Chakra starrer starring actor Vishal

நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, 

அறிமுக இயக்குநர் எம்எஸ் ஆனந்தன் இயக்க, விஷால் தயாரித்து நடித்துள்ள படம் 'சக்ரா'. இந்த படத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 19 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கியுள்ளதாக இயக்குனருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷால், இயக்குனர் ஆனந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

முன்னதாக சக்ரா படம் கடந்த ஆண்டு மே மாத ரிலீசுக்கு தேதி குறிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்தசூழலில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் படம் ரீலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது பிப்ரவரி 19 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள்: தடைகோரிய தீபாவின் மனு தள்ளுபடி
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் தமிழில் ‘தலைவி’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் ஐதராபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.
2. மேற்கு வங்காளத்தில் மோடி, அமித்ஷா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்; தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் மனு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.
3. பா.ஜனதாவுக்காக தான் தேர்தல் ஆணையம் மம்தாவுக்கு தடை விதித்து உள்ளது; சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
பா.ஜனதாவுக்காக தான் தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ய தடைவித்து உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.
4. பசுமை தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்க தடை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
5. இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை
இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்