சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார் + "||" + Actor Rajinikanth visits composer Ilayaraja's new studio

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்
இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.
சென்னை: 

சென்னை கோடம்பாக்கத்தில் 'இளையராஜா ஸ்டுடியோ' என்ற பெயரில் புதிய ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் இசைப்பணிகள் மூலமாக புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளைத் தொடங்கினார். அன்றைய தினம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் நேற்று  நடிகர் ரஜினிகாந்த் இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்துள்ளார். பின்பு கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக இளையராஜாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினி. ஸ்டுடியோவிலும் இளையராஜாவுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டுச் சென்றுள்ளார்.

அதுபோல் இன்றும் மீண்டும் இளையராஜா ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஆச்சரியம் அளித்துள்ளார் ரஜினிகாந்த் . அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்துள்ளார். அதன் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. நடிகை நக்மா- இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கொரோனாவால் பாதிப்பு
நடிகை நக்மா- இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது: தலைவர்கள் வாழ்த்து
51-வது தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
3. நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு
இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
4. 67-வது தேசிய திரைப்பட விருதுகள் முழுப்பட்டியல் ;7 விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகம்!
2019 ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 7 விருதுகளை தமிழ்த்திரையுலகம் வென்றுள்ளது.
5. வரும் 25ம் தேதிஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்
வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.