சினிமா செய்திகள்

மீண்டும் காதலில் சனம் ஷெட்டி + "||" + Sanam Shetty in love again

மீண்டும் காதலில் சனம் ஷெட்டி

மீண்டும் காதலில் சனம் ஷெட்டி
சனம் ஷெட்டி மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் அம்புலி, வால்டர், விலாசம், தகடு, சதுரம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இவரும், இன்னொரு பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷனும் ஏற்கனவே காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தர்ஷன் மீது சனம் ஷெட்டி போலீசிலும் புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த நிலையில் சனம் ஷெட்டி மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண் ஒருவர் கையை பிடித்தபடி சாப்பிடும் புகைப்படத்தை வலைத்தளத்தில் சனம் பகிர்ந்து இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய அவருக்கு நன்றி. அவரோடு இரவு விருந்தில் சாப்பிட்டது மேஜிக்காக இருந்தது என்று பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் அவர் கையை பிடித்து இருக்கும் ஆணின் முகம் தெரியவில்லை. அவர்தான் புதிய காதலர் என்று கூறப்படுகிறது. காதலர் முகத்தை காட்டுங்கள் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.