சினிமா செய்திகள்

விஜய் 66-வது படம் பற்றி பரபரப்பான புதிய தகவல் + "||" + Exciting new information about Vijay 66th movie

விஜய் 66-வது படம் பற்றி பரபரப்பான புதிய தகவல்

விஜய் 66-வது படம் பற்றி பரபரப்பான புதிய தகவல்
விஜய் நடிக்க இருக்கும் 66-வது படத்தை பற்றிய பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் இதுவரை 64 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 64-வது படமாக ‘மாஸ்டர்’, சமீபத்தில் திரைக்கு வந்தது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருந்தார். படம் தியேட்டர்களிலும், இணையதளங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய் தனது 65-வது படத்துக்கு தயாராகி வருகிறார். அந்த படத்தை நெல்சன் டைரக்டு செய்வார் என்று பேசப் படுகிறது. இவர், ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கியவர்.

இதையடுத்து விஜய் நடிக்க இருக்கும் 66-வது படத்தை பற்றிய பரபரப் பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் மறைந்த டைரக்டர் ராம.நாராயணனின் மகன் முரளி ராமசாமி தயாரிப்பார் என்று பேச்சு அடிபடுகிறது.

படத்தின் கதாநாயகி மற்றும் டைரக்டர் முடிவாகவில்லை. டைரக்டர் யார்? என்பதை விஜய் முடிவு செய்வார் என்கிறார்கள்.