சினிமா செய்திகள்

‘‘கவுரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன்’ - ‘சுல்தான்’ படத்தை பற்றி டைரக்டர் பேட்டி + "||" + "Krishna stands by the Kauravas" - Director interview about ‘Sultan’ movie

‘‘கவுரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன்’ - ‘சுல்தான்’ படத்தை பற்றி டைரக்டர் பேட்டி

‘‘கவுரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன்’ - ‘சுல்தான்’ படத்தை பற்றி டைரக்டர் பேட்டி
“மகாபாரதத்தில் கிருஷ்ணர் கவுரவர்கள் பக்கம் நின்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனையில் உருவான ‘சுல்தான்’ படத்தை பற்றி டைரக்டர் பாக்கியராஜ் கண்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“கைதி படத்தின் வெற்றிக்குப்பின் கார்த்தி தனது தோற்றத்தையும், நடிப்பையும் மேலும் மெருகேற்றி உள்ளார். கார்த்தி-ராஷ்மிகா மந்தனா கூட்டணியில், ‘சுல்தான்’, வியாபார ரீதியிலான ஜனரஞ்சக படமாக தயாராகி இருக்கிறது” என்கிறார், படத்தின் டைரக்டர் பாக்கியராஜ் கண்ணன். இவர் மேலும் சொல் கிறார்:-

“மகாபாரதத்தில் கிருஷ்ணர் கவுரவர்கள் பக்கம் நின்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனையில் உருவானதுதான், ‘சுல்தான்’. படம் பார்ப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியம் இருந்து கொண்டிருக்கும். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பார்கள். அதேபோல்தான் ‘உறவின்றி அமையாது உலகு’. உறவுகளுக்காக முன்னால் வந்து நிற்கும் ஒரு வனின் கதைதான், இது.

காதல், காமெடி, பரபரப்பான திரைக்கதை ஆகிய எல்லா அம்சங்களும் கலந்த ஜனரஞ்சகமான படமாக, ‘சுல்தான்’ தயாராகி இருக்கிறது. இந்த படம் கார்த்தியின் தோற்றத்தையும், நடிப்பையும் மேலும் மெருகேற்றி காட்டும். ராஷ்மிகா மந்தனா, மிக எளிமையாக இருப்பார். படத்தில் யோகிபாபு, வில்லன் ராம்சந்திர ராஜு ஆகியோரும் இருக்கிறார்கள்.

எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்”.