சினிமா செய்திகள்

லியோனி மகன் கதாநாயகன் + "||" + Leoni's son is the protagonist

லியோனி மகன் கதாநாயகன்

லியோனி மகன் கதாநாயகன்
பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவ குமார் கதாநாயகன் அறிமுகம் ஆகிறார்.
பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவ குமார், ‘அழகிய கண்ணே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ரகுநந்தன் இசையமைக்கிறார். டைரக்டர் சீனுராமசாமியிடம் உதவி டைரக்டராக இருந்த ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். படப் பிடிப்பு சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது.