சினிமா செய்திகள்

பாபநாசம் 2-ம் பாகத்தில் கமல்? + "||" + Kamal in Papanasam Part 2?

பாபநாசம் 2-ம் பாகத்தில் கமல்?

பாபநாசம் 2-ம் பாகத்தில் கமல்?
பாபநாசம் 2-ம் பாகத்திலும் கமல்ஹாசன் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த திரிஷ்யம் படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி. சீன மொழிகளிலும் வெளியானது. தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மோகன்லால், மீனா நடிக்க தயாராகி ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை பாபநாசம் 2-ம் பாகமாக தமிழில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. பாபநாசம் 2-ம் பாகத்திலும் கமல்ஹாசன் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் கேள்வி எழுப்பியபோது, “கமல்ஹாசன் சம்மதித்தால் பாபநாசம் 2-ம் பாகத்தை இயக்க நான் தயாராக இருக்கிறேன். அவரது விருப்பத்தை பொறுத்தே பாபநாசம் 2-ம் பாகம் உருவாகுமா என்பதை என்னால் சொல்ல முடியும்” என்றார். திரிஷ்யம் 2-ம் பாகத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாபநாசம் 2-ம் பாகத்தில் கமல்?
திரிஷ்யம் 2 படம் பாபநாசம் 2-ம் பாகமாக ரீமேக் செய்யப்படுமா? எனறு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.