சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட சூர்யா + "||" + Surya overcoming from the corona

கொரோனாவில் இருந்து மீண்ட சூர்யா

கொரோனாவில் இருந்து மீண்ட சூர்யா
சூர்யாவுக்கு தற்போது பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது.
நடிகர் சூர்யாவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையை தொடர்ந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த 15-ந் தேதி தொடங்கியபோது கொரோனா பாதிப்பினால் அதில் அவர் கலந்து கொள்ளவில்லை. சூர்யா இல்லாமலேயே பிற நடிகர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினர். இந்த நிலையில் சூர்யாவுக்கு தற்போது பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “அன்பான ரசிகர்களுக்கு, சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று வந்துள்ளது. அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குணமடைந்ததால் விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.