சினிமா செய்திகள்

ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு - அரசியல் பேசவில்லை என ரஜினி தரப்பு தகவல் + "||" + Kamal Haasan meets Rajini Rajini's party informed that he was not talking politics

ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு - அரசியல் பேசவில்லை என ரஜினி தரப்பு தகவல்

ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு - அரசியல் பேசவில்லை என ரஜினி தரப்பு தகவல்
நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன், திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஜினி உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, லதா- ரஜினி தம்பதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருமண நாள் வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. 

இந்த சந்திப்பின் போது, அரசியல் பேசப்படவில்லை என ரஜினி தரப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும், வரும் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.