சினிமா செய்திகள்

மோகன்லால்-மீனாவின் ‘திரிஷ்யம்’ 3-ம் பாகம் + "||" + Mohanlal-Meena's 'Trishyam' Part 3

மோகன்லால்-மீனாவின் ‘திரிஷ்யம்’ 3-ம் பாகம்

மோகன்லால்-மீனாவின் ‘திரிஷ்யம்’ 3-ம் பாகம்
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து ரூ.5 கோடி செலவில் தயாரான ‘திரிஷ்யம்’ மலையாள படம் 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது.
இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி. சீன மொழிகளிலும் வெளியானது. தற்போது ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் மோகன்லால், மீனா நடிக்க தயாராகி ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ராஜ்குமார், பிரியா, சுரேஷ்பாபு ஆகியோர் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க ‘ரீமேக்’ செய்வதாக அறிவித்து உள்ளனர். தமிழ் ‘ரீமேக்’கை பாபநாசம் 2 என்ற பெயரில் உருவாக்கவும் ஆலோசனை நடக்கிறது.

இந்த நிலையில் ‘திரிஷ்யம்’ படத்தின் 3-ம் பாகத்தை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி கூறும்போது, “திரிஷ்யம் 3-ம் பாகத்தை எடுக்கும் திட்டம் இயக்குனர் ஜீத்து ஜோசப் மனதில் உள்ளது. மூன்றாம் பாகம் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் 3-ம் பாகத்தை எடுப்பது குறித்து பேசி உள்ளனர்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோகன்லால் இயக்கும் படத்தில் அஜித்குமார்?
அஜித்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். நாயகியாக கியூமா குரோஷி வருகிறார். வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
2. மீண்டும் நடிக்கும் நதியா
தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகி 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. ரஜினிகாந்த் முதல் முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
3. நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
பிரபல நடிகர் மோகன் லால் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.
4. மோகன்லால்: உடற்பயிற்சி நாயகன்
விவசாயியாக நடிக்கும்போது அதற்கு ஏற்ற விதத்திலான உடற்பயிற்சிகளை செய்து தனது பாடி லாங்வேஜையே மாற்றிக்கொள்வார்.
5. மோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்
கொரோனாவால் நிறைய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. அதையும் மீறி வரும் படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. முடங்கிய படங்கள் பட்டியலில் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கமும் இடம்பெற்றுள்ளது.