சினிமா செய்திகள்

'இந்தியன் 2' தாமதம் இந்திக்கு போகும் இயக்குனர் ஷங்கர் + "||" + 'Indian 2' delayed Director Shankar going to Hindi

'இந்தியன் 2' தாமதம் இந்திக்கு போகும் இயக்குனர் ஷங்கர்

'இந்தியன் 2' தாமதம் இந்திக்கு போகும் இயக்குனர் ஷங்கர்
ஷங்கர் இயக்கிய கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து, கொரோனா பரவல், கமலுக்கு காலில் நடந்த அறுவை சிகிச்சை, தேர்தல் போன்ற காரணங்களால் தொடர்ந்து முடங்கி உள்ளது.
ஷங்கர் இயக்கிய கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து, கொரோனா பரவல், கமலுக்கு காலில் நடந்த அறுவை சிகிச்சை, தேர்தல் போன்ற காரணங்களால் தொடர்ந்து முடங்கி உள்ளது. அந்த படத்தில் இருந்து ஷங்கர் விலகியதாக வெளியான தகவலை படக்குழுவினர் மறுத்தனர். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் நேரடி இந்தி படமொன்றை இயக்கவும் ஷங்கர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் சென்னை வந்து ஷங்கரை சந்தித்து பேசி உள்ளார். எனவே ரன்வீர் சிங் நடிக்கும் இந்தி படத்தை அவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர் அருகே ரூ.3.61 கோடி மதிப்பில் சாலை பணி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு
திருவாரூர் அருகே ரூ.3.61 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கீதா ஆய்வு செய்தார்.
2. பயிர் சேதம் கணக்கெடுப்பு: தகுதியான எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது வேளாண்மை இயக்குனர் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதம் கணக்கெடுப்பின் போது, தகுதியான எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது என்று வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.
3. அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் தமிழ் வளர்ச்சி இயக்குனர் பேச்சு
அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என திருவாரூரில் தமிழ் வளர்ச்சி இயக்குனர் விஜயராகவன் கூறினார்.
4. வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான தேர்வை 2,776 பேர் எழுதினர் மேலாண்மை இயக்குனர் ஆய்வு
தென்னிந்திய பன்-மாநில வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான தேர்வை 2,777 பேர் எழுதினர். தேர்வு மையங்களை கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
5. தஞ்சை மாநகரில் ரூ.904 கோடியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு
தஞ்சை மாநகரில் ரூ.904 கோடியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனரும், தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவருமான எஸ்.பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார்.