சினிமா செய்திகள்

விக்ரமின் இருமுகன் இந்தியில் 'ரீமேக்' + "||" + Vikram's Irumugan 'remake' in Hindi

விக்ரமின் இருமுகன் இந்தியில் 'ரீமேக்'

விக்ரமின் இருமுகன் இந்தியில் 'ரீமேக்'
தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். மோகன்லாலின் திரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளனர்.
தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். மோகன்லாலின் திரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளனர். இந்த நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து 2016-ல் திரைக்கு வந்த இருமுகன் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஆனந்த் சங்கரே இந்தி பதிப்பையும் இயக்குவார் என்று தெரிகிறது.

விக்ரம் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் நடந்தபோது கொரோனா பரவலால் முடங்கியது. எனவே விடுபட்ட மீதி காட்சிகளை படமாக்க விக்ரம் உள்ளிட்ட கோப்ரா படக்குழுவினர் மீண்டும் ரஷியா சென்றுள்ளனர். அங்கு இரண்டு வாரம் படப்பிடிப்பை நடத்திவிட்டு சென்னை திரும்புகிறார்கள். இந்த படத்தில் நாயகிகளாக ஶ்ரீதி ஷெட்டி, மியா ஆகியோர் நடிக்கிறார்கள். கோப்ரா படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதியின் 96 படம் இந்தியில் ரீமேக்
தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து 2018-ல் வெளியான படம் 96. இந்த படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.
2. இந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் ‘96’
தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 96 திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3. அஜித்தின் 2 படங்கள் தெலுங்கில் ‘ரீமேக்'
வெற்றி பெற்ற பிறமொழி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டுகிறார்.
4. சமந்தா படம் இந்தியில் ரீமேக்
சமந்தா படம் இந்தியில் ரீமேக்.
5. இந்தி ராட்சசனில் அக்‌ஷய்குமார்
விஷ்ணு விஷால் நடித்து 2018-ல் திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.