பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி + "||" + Shah Rukh Khan, Taapsee Pannu to Team up for Rajkumar Hirani’s Social Comedy on Immigration?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் டாப்ஸி ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
மும்பை
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி, இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
டாப்ஸி 'லூப் லாபெட்டா' படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனுராக் காஷ்யப்பின் 'டூ-பாரா' படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமான சபாஷ் மித்து உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.ராஜ்குமார் ஹிரானி இயக்க உள்ள குடியேற்றம் தொடர்பான இந்தி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.பஞ்சாபிலிருந்து கனடாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தவரின் கதை இது. இது ஒரு சமூக நகைச்சுவை படமாக எடுக்கப்படுகிறது.
இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.