சினிமா செய்திகள்

தெலுங்கில் மார்க்கெட் பிடித்த விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi is the market favorite in Telugu

தெலுங்கில் மார்க்கெட் பிடித்த விஜய் சேதுபதி

தெலுங்கில் மார்க்கெட் பிடித்த விஜய் சேதுபதி
தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கில் வெற்றிபெற்றால் அவர்களின் முந்தைய படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவது வழக்கம்.
தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கில் வெற்றிபெற்றால் அவர்களின் முந்தைய படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களுக்கு ஆந்திர ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அவர்களின் படங்களை தமிழில் வெளியாகும்போதே தெலுங்கிலும் ரிலீஸ் செய்கின்றனர். விஜய்சேதுபதி சமீப காலமாக நேரடி தெலுங்கு படங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற உப்பென்னா தெலுங்கு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். விஜய்சேதுபதிக்கு தெலுங்கில் தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருப்பதால் ஏற்கனவே அவர் நடித்த தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. தற்போது விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை அதிக தொகைக்கு விற்பனையாகி உள்ளது. மற்ற படங்களை விற்கவும் பேரம் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் காய்கறிகளின் விலையை கிடுகிடுவென உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
2. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
3. விருதுநகர் மார்க்கெட்டில் துவரை விலை உயர்ந்து காணப்பட்டது
விருதுநகர் மார்க்கெட்டில் துவரை விலை உயர்ந்து காணப்பட்டது.
4. சூரிக்கு ‘அப்பா’வாக நடிக்கிறார் விஜய் சேதுபதி!
தற்போதைய கதாநாயகர்களில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்டவர். கதாநாயகனாக நடிப்பதுடன் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.