சினிமா செய்திகள்

19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை + "||" + Actress who condemned senior actors paired with 19-year-old women

19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை

19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை
தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, ''சினிமா துறையில் ஆணாதிக்கம் உள்ளது. வயதான மூத்த நடிகர்கள் 20 வயதுக்கு குறைந்த நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது. சினிமாவில் இருக்கும் ஆணாதிக்கமே இதற்கு காரணம். வயதான நடிகர்களின் கதாபாத்திரங்களை பிரதானமாக வைத்து திரைக்கதை எழுதுகின்றனர். ஆனால் வயதான நடிகைகளை மனதில் வைத்து கதைகள் எழுதுவது இல்லை. ஏராளமான நடுத்தர வயது நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கான கதைகளை யாரும் எழுதுவது இல்லை. படத்துக்கு படம் இளம் நடிகைகளையே நடிக்க வைக்க விரும்புகிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் 19 வயது நடிகையுடன் ஜோடியாக நடிப்பது ஆச்சரியமாக உள்ளது’’ என்று கண்டித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆபாச படங்களில் நடிக்க ரூ.20,000 சம்பளம் கொடுத்த நடிகை
தமிழில் பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல இந்தி நடிகை கெஹனா வசிஸ்த் மும்பையில் தனி பங்களாவில் இளம் பெண்களை வைத்து ஆபாச படங்கள் தயாரித்ததாக கைதாகி இருக்கிறார்.
2. ஒருதலை காதல்: நடிகையை கடத்த முயற்சி?
ஒருதலை காதல் காரணமாக நடிகையை கடத்த முயற்சி நடந்ததா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.