சினிமா செய்திகள்

3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம் + "||" + Why switched to 3 parties? Actress Khushbu Description

3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்

3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்
3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்.
நடிகை குஷ்பு சினிமா, அரசியல் வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- உங்கள் வாழ்க்கை பற்றி?

பதில்:- நான் விதியை பலமாக நம்புகிறேன். விதிப்படியே வாழ்க்கை அமைகிறது. மும்பையில் பிறந்த நான் மாற்று மதத்தவரை மணந்து சென்னையில் செட்டில் ஆவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எத்தனை சம்பிரதாயங்கள் இருந்தாலும் மனிதர்களுக்கு மனிதாபிமானம், நேசிக்கும் மனது இருக்க வேண்டும்.

கேள்வி:- உங்களை பற்றி அடிக்கடி சர்ச்சைகள் வருகிறதே?

பதில்:- தைரியமாக உண்மையை சொல்வதால் சர்ச்சைகள் வருகிறது. சிலர், சமூகத்தில் ஒரு பெண் புத்திசாலியாக இருக்கக்கூடாது. சினிமா துறையை சேர்ந்தவள் என்றால் சுத்தமாக அறிவு கிடையாது, சமூகத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால் வாயை திறக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். அவர்கள் எண்ணங்களுக்கு விரோதமாக எனது நடவடிக்கை இருப்பதால் பிரச்சினை வருகிறது. இந்திய பிரஜையாக எனக்கு இருக்கும் உரிமைப்படி நான் தைரியமாக பேசுகிறேன். அதனால்தான் விவாதங்கள் வருகிறது. உள்ளதை உள்ளபடி பேசுவதுதான் எனக்குள்ள மைனஸ். அது இங்கு சரிப்பட்டு வராது. ஆனாலும் அதை என்னால் மாற்றிக்கொள்ள முடியாது.

கேள்வி:- கட்சி மாறியது குறித்து?

பதில்:- நீங்கள் மூன்று கட்சிக்கு ஏன் மாறினீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். எங்கு கவுரவம் இல்லையோ அங்கு இருக்காதே ஓடிப்போய் விடு என்று எனது அம்மா சொல்லி இருக்கிறார். கவுரவம் இல்லாத இடத்தில் என்னால் இருக்க முடியாது. தி.மு.க.வில் இருந்து எதற்கு வெளியே வந்தேன் என்பது கருணாநிதிக்கு மட்டும்தான் தெரியும். அங்கிருந்து ஈகோ பிரச்சினையால் வெளியே வந்தேன். காங்கிரசிலும் அதுதான் நடந்தது. பா.ஜனதா கட்சி கொள்கைகள் பிடித்ததால் அதில் சேர்ந்தேன்.

கேள்வி:- படங்கள் ஓ.டி.டியில் வெளியாவது குறித்து?

பதில்:- ஓ.டி.டியால் சினிமா துறைக்கு எந்த பாதிப்பும் வராது. தொலைக்காட்சி வந்தபோது தியேட்டர்களுக்கு போக மாட்டார்கள் என்று பேசினர். ஆனால் சினிமா துறை நன்றாகத்தானே இருக்கிறது. பெரிய நடிகர்கள் படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் பார்க்கத்தான் விரும்புவார்கள். ஓ.டி.டியால் சினிமா துறையினருக்கு நல்லது நடக்கும்.

கேள்வி:- மீடூ மாதிரி உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா?

பதில்:- எனக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படவில்லை. ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால் உடனே சொல்லணும். யாராவது தவறாக நடந்தால் உடனே கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும். அதை விட்டு பத்து வருடங்கள் கழித்து மேடை ஏறி எனக்கு அது நடந்தது அவர் அப்படி செய்தார் என்று பேசுவதால் பயன் இல்லை. அது நடக்கும்போது கண்டித்தால்தான் அர்த்தம் இருக்கும்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விரலில் இடப்படும் ‘மை’க்காக காத்திருப்பேன்; ‘சென்னை வந்த பின் ஒருமுறைகூட வாக்களிக்கத் தவறியது இல்லை’; வாக்களித்த பின்னர் குஷ்பு பேட்டி
சென்னைக்கு வந்தபிறகு ஒருமுறைகூட வாக்களிக்கத் தவறியது இல்லை என்று நேற்று வாக்களித்த பின்னர் குஷ்பு தெரிவித்தார்.
2. இன்று முதல் வாக்குப்பதிவு முடியும் வரை கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்
சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் வாக்குப்பதிவு முடியும் வரை சென்னையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
3. ராணுவ வினாத்தாள் கசிவு வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது ஏன்? தலைமை தளபதி விளக்கம்
ராணுவ வினாத்தாள் கசிவு வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது ஏன்? என்பது பற்றி ராணுவ தலைமை தளபதி இன்று விளக்கம் அளித்துள்ளார்.
4. கதை எழுதி படம் தயாரிப்பது ஏன்? ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்
இந்திய பட உலகில் முன்னனி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். தற்போது 99 ஸாங்க்ஸ் என்ற படத்துக்கு கதை எழுதி தயாரித்து இருக்கிறார்.
5. மயிலாப்பூரில் ஸ்ரீபிரியாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பு: கோவையில் தேர்தல் களம் காண்பது ஏன்? தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் விளக்கம்
சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீபிரியாவை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது கோவையில் தேர்தல் களம் காண்பது ஏன்? என்பது குறித்து அவர் விளக்கமளித்தார்.