சினிமா செய்திகள்

ஓட்டல் தொழிலில் இறங்கிய கங்கனா + "||" + Landed in the hotel business Kangana

ஓட்டல் தொழிலில் இறங்கிய கங்கனா

ஓட்டல் தொழிலில் இறங்கிய கங்கனா
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.
தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் கங்கனா பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்தி பட உலகில் போதைப்பழக்கம் உள்ளது என்றும், சினிமா விருந்துகளில் நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினார். மராட்டிய அரசை சாடினார். இதனால் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. இந்த நிலையில் கங்கனா ரணாவத் ஓட்டல் தொழிலுக்கு மாற முடிவு செய்து இருக்கிறார். மணாலியில் புதிதாக ஓட்டல் கட்ட இருக்கிறார். இதற்கான இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் கூறும்போது, ஓட்டல் தொழிலில் ஈடுபடுவது எனது கனவு என்றார். ஏற்கனவே நடிகைகள் பலர் ரியல் எஸ்டேட், நகை வியாபாரம், உணவகம், உடற்பயிற்சி கூடங்கள் நடத்துதல் என்று தொழில்களில் முதலீடு செய்துள்ளனர்.