சினிமா செய்திகள்

கோபத்தில் தனுஷ் + "||" + Dhanush in anger

கோபத்தில் தனுஷ்

கோபத்தில் தனுஷ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடந்ததை தனுஷ் எதிர்த்தார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்றார். அவரது ரசிகர்களும் ஓ.டி.டி.யில் ஜகமே தந்திரம் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஓட்டினர். ஆனாலும் எதிர்ப்பை மீறி ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதை அதிகாரபூர்வமாக அறிவித்து டிரெய்லரையும் வெளியிட்டுள்ளனர். இது தனுசுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இதனால் படத்தை விளம்பரப்படுத்துவதை அவர் தவிர்க்கிறார் என்றும் கூறப்படுகிறது. அந்த படம் சம்பந்தமான தகவல்களையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிரவில்லை. தனது கர்ணன் பட போஸ்டரை வெளியிட்ட அவர் ஜகமே தந்திரம் படத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது தயாரிப்பாளர் மீது அவருக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது என்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அண்ணாத்த’ படத்தை அடுத்து தனுஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது, அவருடைய உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது.
2. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
3. பாடல் வரிகளால் சர்ச்சை; தனுஷ் பட டைரக்டருக்கு மிரட்டல்
‘கலைப்புலி’ எஸ்.தாணு என்றாலே ‘பிரமாண்டம்’ தான் நினைவுக்கு வரும். இவரும், தேசிய விருது பெற்ற நாயகன் தனுசும் ‘கர்ணன்’ படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள்.
4. ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்
தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
5. ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுசின் 43-வது படம்
தனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் அந்த்ரங்கி ரே படத்தில் நடித்தார்.