சினிமா செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஸ்பைடர்மேன் 3-ம் பாகம் + "||" + At Christmas Spiderman Part 3

கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஸ்பைடர்மேன் 3-ம் பாகம்

கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஸ்பைடர்மேன் 3-ம் பாகம்
ஸ்பைடர்மேன் ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இதன் இரண்டாம் பாகம் ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் என்ற பெயரில் 2019-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இதன் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமி ஆகியோர் 3-ம் பாகத்தில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப் ஆகியோர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஸ்பைடர்மேன் போன் ஹோம், ஸ்பைடர்மேன் ஹோம் ரெக்கர், ஸ்பைடர்மேன் ஹோம் ஸ்லைஸ் ஆகிய 3 பெயர்களையும் பகிர்ந்தனர். இதனால் ஒரு படத்துக்கு மூன்று தலைப்புகளா என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். ஸ்பைடர் மேன் 3 என்ற ஹேஷ்டேக்கும் உலக அளவில் டிரெண்டிங் ஆனது.

இந்த நிலையில் ஸ்பைடர்மேன் 3-ம் பாகம் படத்துக்கு ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என்ற தலைப்பு வைத்து இருப்பதாகவும், படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் என்றும் பட நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.