சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள் + "||" + Of Aishwarya Rajesh Love experiences

ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்

ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது.
“நான் 12-ம் வகுப்பு படிக்கும்போது ஒருவனை பிடித்து இருந்தது. அவனுக்கும் என்னை பிடித்தது. ஆனால் கொஞ்ச நாளைக்கு பிறகு அவன் காணாமல் போய் விட்டான். இதனால் சில நாட்கள் மிகவும் வருத்தப்பட்டேன். பிறகு சாதாரணமானேன். அதே மாதிரி மேற்படிப்பு படிக்கும்போது ஒரு பையனும் நானும் காதலித்தோம். அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டோம். படிக்கிற நாட்களில் நடந்த எல்லாமே இனிய ஞாபகங்கள். முதலில் இருந்தே படப்பிடிப்பு என்றால் எனக்கு பயம்தான். முதல் இரண்டு நாட்கள் கேமராவை பார்த்தால் நடுக்கம் வந்துவிடும். அதன் பிறகுதான் சாதாரணமாவேன். நடிகையாக பல நாடுகளில் சுற்றினாலும் எனக்கு பிடித்தது சென்னைதான். முகத்தை வைத்து ஒருவர் அழகாக இருக்கிறார் என்று முடிவுக்கு வருவது சரியல்ல. சினிமா உள்பட எந்த தொழிலாக இருந்தாலும் கொடுத்த தொழிலை சிறப்பாக செய்வதில்தான் அழகு இருக்கிறது.'' இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.