சினிமா செய்திகள்

நடிகரான செல்வராகவன் + "||" + The actor is Selvaragavan

நடிகரான செல்வராகவன்

நடிகரான செல்வராகவன்
7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
செல்வராகவன் தனது தந்தை கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி 2003-ல் திரைக்கு வந்த காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனரானார். அதன்பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து தனுஷ் நடிக்கும் நானே வருவேன், இரண்டாம் உலகம் படத்தின் 2-ம் பாகம் ஆகிய படங்களை இயக்க உள்ளார். இப்போது சாணி காயிதம் படத்தின் மூலம் நடிகராகவும் செல்வராகவன் அறிமுகமாகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்றுள்ள செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “23 வருடங்களாக திரைப்பட உருவாக்கத்தில் இருந்து இன்று முதல் ஒரு நடிகராகிறேன். என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். அவர்கள்தான் என்னை உருவாக்கியவர்கள்'' என்று நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். செல்வராகவனுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன்-2 படம் கைவிடப்பட்டதா?
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து 2010-ல் திரைக்கு வந்த ஆயிரத்தில் ஒருவன் படம் வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன.
2. நடிகரான இயக்குனர் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன்
நடிகரான இயக்குனர் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன்.
3. தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்
தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அடுத்து தனுஷ் கைவசம் 10 படங்கள் உள்ளன.