சினிமா செய்திகள்

ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம் + "||" + At the Oscars Advanced Surya film

ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்

ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்
ஆஸ்கார் போட்டிக்கான பொது பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிட அனுப்பி வைத்தனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்து ஓ.டி.டியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று படத்தை ஆஸ்கார் போட்டிக்கான பொது பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிட அனுப்பி வைத்தனர். இந்த படத்தை பொதுபிரிவு போட்டியில் திரையிடுவதற்காக ஆஸ்கார் அகடமி திரையில் பதிவேற்றம் செய்தனர். இது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சூரரை போற்று படம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஆஸ்கார் விருது போட்டிக்கு இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் இடம்பெற தகுதியான படங்கள் பட்டியலை ஆஸ்கார் அமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் இடம்பெற்ற 366 படங்கள் வரிசையில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை பிரிவில் சூரரை போற்று படம் இடம் பெற்றுள்ளது.

இது சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்களை வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்து இறுதி பட்டியல் அறிவிக்கப்படும்.