சினிமா செய்திகள்

37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது + "||" + 37 years later Munthanai Muduchu picture Getting ready again

37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது

37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
கே.பாக்யராஜ்-ஊர்வசி நடித்து மிகப்பெரிய வெற்றியையும், வசூல் சாதனையையும் நிகழ்த்திய படம், ‘முந்தானை முடிச்சு.
’ 37 வருடங்களுக்கு பின், இந்த படம் மீண்டும் தயாராகிறது. பாக்யராஜ் நடித்த வேடத்தில் சசிகுமாரும், ஊர்வசி நடித்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்டு செய்கிறார். சதீஷ் தயாரிக்கிறார்.

‘சுந்தரபாண்டியன்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படம், இது. சசிகுமாரும், எஸ்.ஆர்.பிரபாகரனும் இணைந்து பணிபுரியும் 3-வது படம் இது. படத்துக்கு ‘முந்தானை முடிச்சு’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.