சினிமா செய்திகள்

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அறுவை சிகிச்சை + "||" + Amitabh Bachchan Shares An Update On His Health, Writes About Undergoing A Surgery

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அறுவை சிகிச்சை

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அறுவை சிகிச்சை
அமிதாப்பச்சன் அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. அவரது கல்லீரல் 70 சதவீதம் செயல் இழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை எடுத்து தொடர்ந்து படங்களில் நடித்தும் வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதற்காக சிகிச்சை பெற்று குணமாகி மீண்டார். தற்போது அஜய்தேவ்கானுடன் ‘மே டே’, ரன்பீர் கபூர் நடிக்கும் ‘பிரம்மாஸ்த்ரா’ மற்றும் பிரபாசுடன் இணைந்து நடிக்கும் படம் ஆகியவை அவர் கைவசம் உள்ளன. சமீபத்தில் இவற்றின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் அமிதாப்பச்சன் அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனது வலைத்தள பக்கத்தில், “மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, எழுத இயலவில்லை'' என்று பதிவிட்டுள்ளார். அறுவை சிகிச்சை என்று குறிப்பிட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய வேண்டி வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.