சினிமா செய்திகள்

நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம் + "||" + I am Jodia for Vijay Pooja Hegde Description

நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்

நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
விஜய் நடித்த மாஸ்டர் படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஓ.டி.டி. தளத்திலும் வெளியிட்டனர்.
தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. பாகுபலி படத்தின் வசூல் சாதனையை மாஸ்டர் படம் முறியடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அடுத்த படத்தில் நடிக்க விஜய் தயாராகி உள்ளார். இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார். இது விஜய்க்கு 65-வது படம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வு நடக்கிறது. பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரிடமும் படக்குழுவினர் பேசி வருகிறார்கள். இதுகுறித்து பூஜா ஹெக்டே கூறும்போது, “நான் முதலில் தமிழ் படத்தில்தான் அறிமுகமானேன். எனவே தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. விஜய்யுடன் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. எனக்கு விஜய்யுடன் ஜோடி சேர ஆர்வம் உள்ளது. அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்து இருக்கிறேன். அவருக்கு நான்தான் ஜோடி என்று இருந்தால் அது நிச்சயம் நடக்கும்'' என்றார்.