சினிமா செய்திகள்

யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ் + "||" + Yogi Babu movie Release on OTT

யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்

யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
தியேட்டர்களுக்கு பதிலாக புதிய படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது.
சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. அடுத்து யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள மண்டேலா படத்தையும் ஓ.டி.டி.யிலும், தொலைக்காட்சியிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. மண்டேலா படத்தை மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ஏற்கனவே எடுத்த ஏலே படமும் தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. விரைவில் ஓ.டி.டி.யிலும் வருகிறது. தற்போது மண்டேலா படத்தையும் அதே பாணியில் வெளியிடுகிறார். யோகிபாபு கதாநாயகனாக நடித்த காக்டெயில் படம் ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியானது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹன்சிகா படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆலோசிக்கின்றனர்.