சினிமா செய்திகள்

மன அழுத்தம் தரும் திருமண நிர்ப்பந்தம்- நடிகை சமீரா ரெட்டி + "||" + Stressful marriage compulsion- Actress Sameera Reddy

மன அழுத்தம் தரும் திருமண நிர்ப்பந்தம்- நடிகை சமீரா ரெட்டி

மன அழுத்தம் தரும் திருமண நிர்ப்பந்தம்- நடிகை சமீரா ரெட்டி
தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி அஜித்குமாருடன் அசல், விஷாலுடன் வெடி, ஆர்யாவின் வேட்டை படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி அஜித்குமாருடன் அசல், விஷாலுடன் வெடி, ஆர்யாவின் வேட்டை படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2014-ல் தொழில் அதிபர் அக்‌ஷய் வர்டேவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சமீரா ரெட்டி படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் சமீரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் “பெண்களிடம் பலரும் திருமணம் பற்றியே கேட்கிறார்கள். எனக்கு 35 வயதிலும் திருமணம் நடக்காமல் இருந்ததை பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்வாய், குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள போகிறாய்? என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால் எனக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளவும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் பெண்களுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். திருமணமான பிறகும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து அழுத்தம் கொடுக்கின்றனர். குழந்தை பிறந்தால் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? என்று கேட்பார்கள். இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டி உள்ளது. திருமணம் பற்றி அவசரமாகவோ பயந்தோ எந்த முடிவும் எடுத்து விடக்கூடாது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கில் ஊர் சுற்றிய நடிகர்-நடிகை மீது வழக்கு
கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
2. விக்ரம் பட நடிகை 2-வது திருமணம்?
தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரேமா, பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
3. கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம்
கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம்.
4. சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா
சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா.
5. திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைத்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார்.