தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பெரிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பெரிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையையொட்டி பல பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்களால் மாலை, இரவு காட்சிகளுக்கு ரசிகர்கள் வரத்து குறைந்து வசூல் பாதிக்கும் என்றும் சுவரொட்டிகள் ஒட்டி படங்களுக்கு விளம்பரம் செய்வது கஷ்டம் என்றும் தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், விஷ்ணு விஷால், ராணா நடித்துள்ள காடன் ஆகிய படங்கள் மார்ச் மாதமும் கார்த்தியின் சுல்தான், தனுசின் கர்ணன், விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார். விக்ரமின் கோப்ரா, சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களை ஏப்ரல் மாதமும் அடுத்தடுத்து திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். மேலும் பல படங்கள் தேர்தல் நேரத்தில் ரிலீசாக உள்ளன. இந்த படங்களை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வருவதா? அல்லது தள்ளி வைப்பதா? என்று தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள்.
‘‘ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமுக்கு எதிராக வாக்களித்த தி.மு.க., நேரத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் கட்சி’’, என்று நீலகிரி தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.