சினிமா செய்திகள்

சமந்தாவின் முதல் காதல் + "||" + Samantha's first love

சமந்தாவின் முதல் காதல்

சமந்தாவின் முதல் காதல்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சென்னை பல்லாவரத்தில் வளர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு ஐதராபாத்தில் குடியேறிவிட்டார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சென்னை பல்லாவரத்தில் வளர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு ஐதராபாத்தில் குடியேறிவிட்டார். தற்போது விஜய்சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தற்போது சென்னையில் நடத்துகின்றனர். இதிலும் சமந்தா பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் தனது தோழிகளை சந்தித்து பேசி உள்ளார். இந்த நிலையில் பல்லாவரம் பகுதியில் காரில் செல்லும்போது அங்குள்ள மலையை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுடன் வெளியிட்ட பதிவில், “நான் வளர்ந்தபோது எனது வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் இந்த மலை தெரியும். இது எனக்கு பிடித்த இடம். மற்ற மனிதர்களை விட என்னைப்பற்றி இந்த மலைக்குத்தான் அதிகம் தெரியும். தேர்வு நாட்களில் கடவுளுக்கு கொடுத்த உறுதி மொழியை நான் காப்பாற்றவில்லை. எனது முதல் காதல், அதன் முறிவு, தோழியின் மரணம், அழுகை, இதனால் பல்லாவரம் மலையை நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒட்டக குட்டியை திருடி காதலிக்கு பிறந்த நாள் பரிசளிப்பு காதலன், காதலி போலீசில் சிக்கினர்
ஒட்டக குட்டியை திருடி காதலிக்கு பிறந்த நாள் பரிசாக அளித்த காதலன், காதலி போலீசில் சிக்கினர்.
2. குன்றத்தூரில் திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை
குன்றத்தூரில் திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை செய்து கொண்டார்.
3. காதலித்த பெண் பேச மறுத்ததால் நகைபட்டறை தொழிலாளி தற்கொலை
காதலித்த பெண் பேச மறுத்ததால் நகைபட்டறை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.