சினிமா செய்திகள்

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் + "||" + Dhanush in the shooting of a Hollywood movie

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்
தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் கட்டும் தனது புதிய வீட்டுக்கு பூமி பூஜை போட்டு விட்டு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் பங்கேற்று வந்தார். தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து தனுஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக 3 மாதங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். படத்தில் ஒரு கொலை கும்பலின் தலைவனாக தனுஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2. பாடல் வரிகளால் சர்ச்சை; தனுஷ் பட டைரக்டருக்கு மிரட்டல்
‘கலைப்புலி’ எஸ்.தாணு என்றாலே ‘பிரமாண்டம்’ தான் நினைவுக்கு வரும். இவரும், தேசிய விருது பெற்ற நாயகன் தனுசும் ‘கர்ணன்’ படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள்.
3. சென்னையில் தொடங்கியது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. கோபத்தில் தனுஷ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடந்ததை தனுஷ் எதிர்த்தார்.
5. ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுசின் 43-வது படம்
தனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் அந்த்ரங்கி ரே படத்தில் நடித்தார்.