சினிமா செய்திகள்

துப்பாக்கி சுடும் பயிற்சி வைரலாகும் அஜித் புகைப்படங்கள் + "||" + Ajith photos of sniper training going viral

துப்பாக்கி சுடும் பயிற்சி வைரலாகும் அஜித் புகைப்படங்கள்

துப்பாக்கி சுடும் பயிற்சி வைரலாகும் அஜித் புகைப்படங்கள்
அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது.
அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வலிமை படத்தின் முதல் தோற்ற போஸ்டர் பணிகள் நடந்து வருகிறது என்றும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வினோத்தும் வலிமை போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இது அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஜித் புகைப்படங்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தன்னை சந்தித்த ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வந்தன. பின்னர் பைக், சைக்கிளில் சென்ற புகைப்படங்கள் வெளியானது. தற்போது சென்னை ரைபிள் கிளப்பில் அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுப்பதற்காக சென்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் தீயாக பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. அஜித் குமாரின் 61-வது படம்
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 60-வது படமான வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
2. அஜித்தின் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு
அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
3. வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை
சட்டமன்ற தேர்தலில் நேற்று பொதுமக்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.