சினிமா செய்திகள்

வளரும் நடிகைகளுக்கு தமன்னா அறிவுரை + "||" + Tamanna advice for budding actresses

வளரும் நடிகைகளுக்கு தமன்னா அறிவுரை

வளரும் நடிகைகளுக்கு தமன்னா அறிவுரை
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா தற்போது 5 தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா தற்போது 5 தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“எவ்வளவு பெரிய நடிகர், நடிகையாக இருந்தாலும் சில நேரங்களில் பட வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலைமைகள் வரும். திரையில் நம்மை காணவில்லை என்றால் மக்கள் மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் எந்த வாய்ப்பு வந்தாலும் அதில் நடிக்க வேண்டும் என்று சில நடிகைகள் ஒப்புக்கொள்கிறார்கள். அந்த சமயத்தில்தான் நிறைய தவறுகள் நடக்கும். வளரும் நடிகைகள் தங்களுக்கு எந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும் எது பொருந்தாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முதலுக்கே மோசம் வந்துவிடும். வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் சரி பிடிக்காத படங்களை எந்த நிலையிலும் ஒப்புக்கொள்ளவே கூடாது. பிடிக்காத படத்தை ஒப்புக்கொண்டால் அந்த ஒரு படத்தினால் சினிமா வாழ்க்கை மொத்தமும் அழிந்துவிடும். சரியான கதாபாத்திரங்கள் வராதபோது வந்ததையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் சும்மா இருந்தால் கூட பரவாயில்லை.''

இவ்வாறு தமன்னா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நகைச்சுவை பட கஷ்டங்கள் இளம் இயக்குனர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை
கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் நகைச்சுவை படத்தை பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் வியந்து பேசி இருந்தார்.
2. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு மக்கள் பணியாற்ற வேண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் அதிக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
3. எந்தவித இடர்பாடுகள் இன்றி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் எந்தவித இடர்பாடுகள் இன்றி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தினார்.
4. கருப்பு பூஞ்சை தாக்கிய நோயாளிகளுக்கு என்னென்ன முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? டாக்டர்களுக்கு அறிவுரை
கருப்பு பூஞ்சை தாக்கிய நோயாளிகளுக்கு என்னென்ன முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி டாக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
5. திருமணம் என்பது புனிதமானது: கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் ஐகோர்ட்டு அறிவுரை
திருமணம் என்பது புனிதமானது. கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.