சினிமா செய்திகள்

நடிகை அனுபமா திருமணம்? + "||" + Actress Anupama married?

நடிகை அனுபமா திருமணம்?

நடிகை அனுபமா திருமணம்?
மலையாளத்தில் வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். தற்போது அதர்வா ஜோடியாக தள்ளிப்போகாதே படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். தற்போது அதர்வா ஜோடியாக தள்ளிப்போகாதே படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரனும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. பும்ரா டுவிட்டரில் பின் தொடரும் சிலரில் அனுபமா பரமேஸ்வரன் மட்டுமே நடிகை. வேறு எந்த நடிகையையும் அவர் பின் தொடரவில்லை. அதுபோல் அனுபமாவும் பும்ரா பதிவிடும் அனைத்து பதிவுகளையும் லைக் செய்து வருகிறார். தங்களுக்குள் காதல் என்று வெளியாகும் தகவல் வதந்தி என்று ஏற்கனவே மறுத்து இருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய பும்ரா தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொல்லி விடுமுறை கேட்டு இருக்கிறார். இதுபோல் அனுபமாவும் தனக்கு சந்தோஷமான விடுமுறை என்று இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளார். இருவரும் விடுமுறை என்று சொல்வதால் பும்ராவை திருமணம் செய்து கொள்ள இருப்பவர் அனுபமாதான் என்று வலைத்தளத்தில் பலரும் பேசி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. விக்ரம் பட நடிகை 2-வது திருமணம்?
தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரேமா, பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.