சினிமா செய்திகள்

விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3.5 கோடி சம்பளம்? + "||" + Pooja Hegde gets Rs 3.5 crore salary to play Vijay duo?

விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3.5 கோடி சம்பளம்?

விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3.5 கோடி சம்பளம்?
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார்.
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார். இது விஜய்க்கு 65-வது படம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேயிடம் பேசி வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. இவர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் கூறும்போது, “விஜய் ஜோடியாக நடிக்க ஆர்வம் உள்ளது. அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்து இருக்கிறேன். அவருக்கு நான்தான் ஜோடி என்று இருந்தால் அது நிச்சயம் நடக்கும்'' என்றார். இந்த நிலையில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியாகி உள்ளதாகவும் அவருக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று ஒரு தகவலும், அரசியல்வாதி அல்ல தாதாக்களை மையப்படுத்திய அதிரடி சண்டை படமாக தயாராகிறது என்று இன்னொரு தகவலும் பரவி வருகிறது.