சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் பும்ரா- நடிகை அனுபமா திருமணம் ; அனுபமாவின் தாயார் மறுப்பு 'வதந்திகளை வேடிக்கை பார்க்கிறோம்' + "||" + Is Jasprit Bumrah Marrying Anupama Parameswaran? Actress' Instagram Post Sparks Wedding Rumours

கிரிக்கெட் வீரர் பும்ரா- நடிகை அனுபமா திருமணம் ; அனுபமாவின் தாயார் மறுப்பு 'வதந்திகளை வேடிக்கை பார்க்கிறோம்'

கிரிக்கெட் வீரர் பும்ரா-  நடிகை அனுபமா திருமணம் ; அனுபமாவின் தாயார்  மறுப்பு 'வதந்திகளை வேடிக்கை பார்க்கிறோம்'
கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை அனுபமாவின் தாயார் மறுத்துள்ளார்.
திருவனந்தபுரம்

சொந்தக் காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா பங்கேற்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள 20 ஓவர் தொடரில் அவர் இடம்பெறவில்லை. பும்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அனுபமாவின் தாயார் சுனிதா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பும்ராவும்,அனுபமாவும் இன்ஸ்டகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதைப் பிடிக்காதவர்கள் தான் இருவரையும் இணைத்து செய்திகள் வெளியிடுகிறார்கள். அனுபமாவை எல்லோரும் மறந்திருக்கும்போது புதிய கதை வெளியாகும். இதை நேர்மறையாகவே பார்க்கிறோம். 

இதற்கு முன்பும் அனுபமாவை பும்ராவுடன் சேர்த்து எழுதினார்கள். இதன்பிறகு இருவரும் ஒருவரையொருர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்வதை நிறுத்தி விட்டார்கள் என நினைக்கிறேன். ஒருமுறை விடுதி ஒன்றில் அனுபமா படப்பிடிப்பில் இருந்தார். அதில் பும்ராவும் வந்து தங்கினார். அப்போது தான் இருவரும் முதல்முறையாகச் சந்தித்தார்கள். 

இப்போது இருவரையும் பற்றி ஏன் செய்திகள் வெளிவருகின்றன என எனக்குப் புரியவில்லை. தற்போது படப்பிடிப்புக்காகத்தான் ராஜ்கோட்டுக்கு அனுபமா சென்றுள்ளார். மக்கள் எவ்விதமான வதந்தி பரப்பினாலும் அதில் உண்மையில்லை. வதந்திகளை நாங்கள் வேடிக்கையாகவே எடுத்துக்கொள்வோம் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்
ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார்.
2. "பிரபாஸ் 21" படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சனின் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் மது விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
4. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
5. இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்