சினிமா செய்திகள்

ஹன்சிகாவின் ஆல்பம் முதல் இடத்தை பிடித்தது! + "||" + Hansika's album topped the charts

ஹன்சிகாவின் ஆல்பம் முதல் இடத்தை பிடித்தது!

ஹன்சிகாவின் ஆல்பம் முதல் இடத்தை பிடித்தது!
நடிகை ஹன்சிகா மோத்வானியின் முதல் இந்தி ஆல்பமாக, ‘பாடி சேக்’ வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து அவருடைய இரண்டாவது ஆல்பமான ‘மாஸா’ பாடலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.வெளியான மூன்றே நாட்களில், யுடியூப் தளத்தில் 20 மில்லியன் பார்வைகளை குவித்து, இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. முந்தைய இந்தி பாடலான ‘பாடி சேக்’கும் 20 மில்லியன் பார்வைகளை குவித்தது.

இந்திய இசையுலகில் பிரபலமான பி.பிராக், மாஸா பாடலை இசையமைத்து பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக பெருமளவில் பாதித்துள்ளது. அனைவர் மனதையும் கவர்ந்து இழுத்திருக்கிறது.

நடிகை ஹன்சிகாவின் புதுவிதமான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.