சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகர் 5-வது திருமணம் + "||" + Hollywood actor's 5th marriage

ஹாலிவுட் நடிகர் 5-வது திருமணம்

ஹாலிவுட் நடிகர் 5-வது திருமணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ‘பேஸ் ஆப், கோஸ்ட் ரைடர், ஹான் இன் 60 செகண்ட்ஸ், ரைசிங் அரிசோனா, தி ராக்’ உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நிக்கோலஸ் கேஜ் நடித்து இருக்கிறார். ‘லீவிங் லாஸ் வேகாஸ்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்றார். நிக்கோலஸ் கேஜுக்கு 57 வயது ஆகிறது. இவருக்கு 4 தடவை திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது. முதலாவதாக 1995-ல் நடிகை பாட்ரிசியாவையும், இரண்டாவது 2002-ல் லிசா மேரி பிரெஸ்லியையும், 3-வதாக 2004-ல் ஆலீஸ் கிம்முவையும், 4-வதாக மேக்கப் கலைஞர் எரிகா கோய்கேவையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். எரிகா கோய்கேவை திருமணமான 4-வது நாளிலேயே விவாகரத்து செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் தற்போது 57 வயதாகும் நிக்கோலஸ் தனது 26 வயது காதலி ரிக்கோ ஷிபாடாவை 5-வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ரகசியமாக நடந்த இவர்கள் திருமணம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் படன்நயில். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நக்சத்திரத்திலக்கும், ருதன்மரே சூக்‌சிக்குகா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார்.
2. திருக்குவளை செல்லும் வழியில், மண்டப வாசலில் மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின்
திருக்குவளை செல்லும் வழியில் மண்டப வாசலில் மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து, அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
3. 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு.
4. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் மு.க.ஸ்டாலினிடம், நடிகர் தியாகராஜன் வழங்கினார்
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் மு.க.ஸ்டாலினிடம், நடிகர் தியாகராஜன் வழங்கினார்.
5. பெண்ணை கடத்திச்சென்று திருமணம்: மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் கைது
பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்ய முயற்சி செய்ததாக, மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.