சினிமா செய்திகள்

வருமானவரி சோதனை டாப்சியை சாடிய கங்கனா ரணாவத் + "||" + Kangana Ranaut slams income tax check

வருமானவரி சோதனை டாப்சியை சாடிய கங்கனா ரணாவத்

வருமானவரி சோதனை டாப்சியை சாடிய கங்கனா ரணாவத்
நடிகை டாப்சி, இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
நடிகை டாப்சி, இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். டாப்சியிடம் இருந்து ரூ.5 கோடிக்கு பண ரசீது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருவரும் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்த சோதனை நடந்துள்ளதாக விமர்சனங்களும் கிளம்பின இந்த நிலையில் டாப்சி ‘டுவிட்டரில்’ கேலியாக வெளியிட்ட பதிவில், ''3 நாட்கள் 3 விஷயங்களை தேடி சோதனை நடந்துள்ளது. பாரிஸ் நகரில் எனக்கு சொந்தமாக பங்களா இருப்பதாக கருதி அதன் சாவியை தேடினார்கள். நான் ஏற்கனவே வேண்டாம் என்று மறுத்த ரு.5 கோடி ரசீது. அதை எடுத்து ‘பிரேம்’ போட்டு எனக்கு தரப்போகிறார்கள். 2013-ம் ஆண்டு நடந்த வருமான வரி சோதனை பற்றிய என் நினைவுகளை தேடினார்கள். நான் மலிவானவள் இல்லை'' என்று குறிப்பிட்டு இருந்தார். டாப்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள பதிவில், ''நீங்கள் மலிவானவர்தான். நீங்கள் பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் பெண்ணியவாதி. உங்கள் எஜமானர் காஷ்யப் வீட்டில் வரி ஏய்ப்பு காரணமாக 2013-ல் சோதனை நடந்தது. அதிகாரிகள் உங்களிடம் நடந்த சோதனை அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். நீங்கள் குற்றமற்றவராக இருந்தால் சோதனைக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்று நிரபராதி என்று நிரூபியுங்கள்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் 3 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
சென்னையில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்த 100 கோடி பணத்தை நூதனமாக மோசடி செய்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
2. காஷ்மீரில் துப்பாக்கி உரிமம் முறைகேடு; 40 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
காஷ்மீரில் முறைகேடாக துப்பாக்கி உரிமம் வழங்கிய வழக்கில், டெல்லி உட்பட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.
3. மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை
மேல வாஞ்சூர் சோதனை சாவடியில்போலீசார் வாகன சோதனை.
4. நாகூர், திட்டச்சேரி பகுதிகளில் சாராயம் - மதுபாட்டில்கள் கடத்திய 13 பேர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நாகூர், திட்டச்சேரி பகுதிகளில் சாராயம் - மதுபாட்டில்கள் கடத்திய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
5. நாகையில் வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
நாகையில் வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேரில் ஆய்வு செய்தார். இதனால் தேவையின்றி வாகனங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.