சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாற்று கதையில் தமன்னா + "||" + Tamanna in the biography of legendary actress Jamuna

பழம்பெரும் நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாற்று கதையில் தமன்னா

பழம்பெரும் நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாற்று கதையில் தமன்னா
நடிகர்- நடிகைகள் வாழ்க்கை வரலாறு சினிமா படங்களாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன.
நடிகர்- நடிகைகள் வாழ்க்கை வரலாறு சினிமா படங்களாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன. மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் வித்யாபாலன் நடித்து தேசிய விருது பெற்றார். இதுபோல் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. என்.டி.ராமராவ், சஞ்சய்தத், கவர்ச்சி நடிகை ஷகிலா ஆகியோர் வாழ்க்கை வரலாறும் படங்களாக வந்தன. ஜெயலலிதா வாழ்க்கை தலைவி பெயரில் படமாகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். விமான விபத்தில் இறந்த சவுந்தர்யா, நடிகையும் இயக்குனருமான விஜய நிர்மலா ஆகியோர் வாழ்க்கையும் படமாக உள்ளது. இந்த வரிசையில் பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ஜமுனா வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா வாழ்க்கை கதை 'தலைவி' படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்று
ஜெயலலிதா வாழ்க்கை கதை 'தலைவி' படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்று.
2. பறக்கும் சீக்கியரின் வாழ்க்கை தரும் பாடம்
‘பறக்கும் சீக்கியர்’ என்று இந்தியாவே போற்றி புகழ்ந்த 91 வயது தடகள வீரர் மில்காசிங், கொடிய கொரோனாவின் நச்சு கரங்கள் தீண்டி மறைந்துவிட்டார்.
3. புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பு ஏற்கவுள்ள புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு.
4. இளைஞர் மன்றம் தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ஆனது வரை மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு
இளைஞர் மன்றம் தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ஆனது வரை மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு.
5. சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை வாழ்க்கை படமாகிறது
தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது.