சினிமா செய்திகள்

கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் + "||" + Raghav Lawrence as the villain for Kamal

கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்

கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்சிடம் பேசி வருகிறார்கள். கதையும், கதாபாத்திரமும் லாரன்சுக்கு பிடித்துள்ளதாகவும், இதனால் படத்தில் அவர் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் படக்குழுவினர் நம்புகின்றனர். லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். முந்தைய மாஸ்டர் படத்திலும் விஜய் சேதுபதியின் வில்லன் வேடம் விஜய்க்கு இணையாக இருந்தது. அதுபோல் கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லன் வேடத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது சட்டமன்ற தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். லாரன்ஸ் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் விக்ரம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடிக்கும் கவுதம் மேனன்
பல படங்களில் பிசியாக நடித்துவரும் விஜய்சேதுபதி, படத்தில் இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் வில்லன் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
2. ‘தல 61’ படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
3. பிரபல பாடலை ரீமிக்ஸ் செய்யும் ராகவா லாரன்ஸ்
ருத்ரன் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ், பிரபல பாடலை ரீமிக்ஸ் செய்து நடித்துள்ளார்.
4. நடிகரான இயக்குனர் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன்
நடிகரான இயக்குனர் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன்.
5. வில்லனாக - கதாநாயகனாக சத்யராஜின் 43 வருட சாதனை
தமிழ் பட உலகுக்கு பெருமை சேர்க்கும் நடிகர்களில் முக்கியமானவர், சத்யராஜ். இவர் திரையுலகுக்கு வந்து 43 வருடங்கள் ஆகின்றன.